தனி அறையில் என்னை பூட்டினேன்
கவிதை எழுதுவதற்கு ;
இயற்கையை ரசிக்க எண்ணினேன்
கவிதை எழுதுவதற்க்கு ;
என் நினைவுகளை புரட்டி பார்த்தேன்
கவிதை எழுதுவதற்கு ;
இவை அனைத்திலும் நிரம்பாத காகிதம்,
உன்னை நினைத்தவுடன் நிரம்பிவிட்டது
கவிதைகளாலும் என் கண்ணீராலும் !
Monday, March 16, 2009
விரும்பிய பிரிவு
என்னக்காக உன்னை விரும்பினேன்
உனக்காக உன்னை பிரிகிறேன்
உனக்காக என்பதால் இந்த பிரிவையும்
விரும்ப ஆரம்பித்து விட்டேன்!
உனக்காக உன்னை பிரிகிறேன்
உனக்காக என்பதால் இந்த பிரிவையும்
விரும்ப ஆரம்பித்து விட்டேன்!
Friday, March 13, 2009
மழைத்துளிகள் !
மழை பொழிந்த பிறகு தன் ,இலைகளில் பதுக்கி வைத்த மழைத்துளிகளை பூமிக்கு அர்ப்பணம் செய்யும் மரங்கள் . மழையில் நனைந்த பின் கூட ,இந்த இதமான தூரலில் மெய் சிலிர்த்து விடும் ; மௌனமாய் மனதில் தேங்கியிருந்த இளமை பருவ நினைவுகள் பொங்கி வர , முகம் முழுவதும் புன்னகை அழைக்காமலே வந்து விடும் .சில்லென்ற காற்றோடு இந்த இதமான தூரல் நம்மை தாக்கும் போது இது தான் சொர்கமோ என்று கூட தோன்றி விடும் .இத்தனை சக்தி வாய்ந்ததா இந்த அழகான மழைத்துளிகள் !
Wednesday, March 11, 2009
விடியா இரவுகள்
உன் மடியில் உறங்கிய நிமிடங்கள்
உன் நெஞ்சில் புதைகொண்ட நொடிகள்
இவை இரண்டையும் கனவாக ஏந்திய இரவுகள்
இந்த இனிமையான இரவுகள் மட்டும்
விடியாமல் இருந்துவிட்டால்
கனவுகளிலேயே வாழ்ந்துவிடுவேன்
வாழ்நாள் முழுவதும் உன்னருகில் !!
உன் நெஞ்சில் புதைகொண்ட நொடிகள்
இவை இரண்டையும் கனவாக ஏந்திய இரவுகள்
இந்த இனிமையான இரவுகள் மட்டும்
விடியாமல் இருந்துவிட்டால்
கனவுகளிலேயே வாழ்ந்துவிடுவேன்
வாழ்நாள் முழுவதும் உன்னருகில் !!
நிலவே !
யாருக்காக தினமும் உலகைச் சுற்றி வருகிறாய் வெண்ணிலவே
உன் காதலை மறுக்கும் ஜீவனும் உண்டோ இந்த பூவுலகில்
உன் காதலை மறுக்கும் ஜீவனும் உண்டோ இந்த பூவுலகில்
Subscribe to:
Posts (Atom)