Monday, December 13, 2010

கனவில் வாழ்ந்தது போதும்

இன்றைய கனவில் நேற்று
நாளைய கனவில் இன்று
கனவில் வாழ்ந்தது போதும்
என்று எண்ணும் போது அடித்தது கடிகாரம்

Friday, December 10, 2010

எத்தனை யுகங்களை

ஒரு ஒரு நொடியும் யுகமாக தெரிவது ஏனோ
எத்தனை யுகங்களை கடக்க வேண்டுமோ
என் கனவுகள் மெய்ப்பட

என்னிடம் விரைவில் வந்துவிடு

கண் முன்னே நீ இல்லை என்பதால்
கண்களையும் திறக்க மறுக்கிறேன்
என்னிடம் விரைவில் வந்துவிடு
நான் சுவாசிக்க மறுக்குமுன்

கனவுகள்

கனவுகள் மெய்ப்பட வேண்டினேன்
கனவுகள் முழுதும் நீ வர கனவை வேண்டினேன்

என்னை விட்டு எங்கும் செல்ல வில்லையடி நீ

தழுவி செல்லும் காற்றிலும் உன் சுவாசம்
கேட்கும் ஒலி எங்கும் உன் குரல்
கனவுகள் முழுதும் உன் நினைவுகள்
என்னை விட்டு எங்கும் செல்ல வில்லையடி நீ
என் மனதில் இருக்கிறாய்
என்னுடன் வாழ்கிறாய்

Sunday, January 31, 2010

உனக்காக

கண்ணுறங்கும் நேரத்தில் என்னுடன் இருகிறாய்
கண் மூடியே தவமிருக்கிறேன்
நீ என்னுடன் இருக்கும் ஓரிரு நிமிடத்திற்காக