Monday, April 27, 2009

மனம் ஏனோ மறுக்கிறது !

கண்களில் வழியும் காதலை ரசித்தவாரே
வார்த்தைகளை தேட மனம் துடித்தது 
நீ அருகில் இல்லை என்பதை அறிந்தும் 
அதை ஏற்றுக்கொள்ள மனம் ஏனோ மறுக்கிறது !

உன் கண் பார்வை !

வார்த்தைகள் தேவை இல்லை;
என் அருகில் காதல் கடிதங்களை 
நீ வாசிக்க தேவை இல்லை; 
உன் கண் பார்வை போதுமடா 
ஆயிரம் மொழிகளில் காதலை மொழிந்துவிட்டாய் 

Tuesday, April 7, 2009

தொலைவே

தொலைவே உன்னை தொலைத்துவிட துடிக்கிறது மனம்,
எங்கள் நெருக்கத்தை தொலைத்ததனால் !

தொலைவே நீ உடல்களை பிரித்தாலும்
உள்ளங்களை நெருக்கமாக இணைக்கிறாய்
அந்த ஒரு காரணத்திற்காக
உன் கருணை மனுவை பரிசீலக்கிறேன்