Saturday, February 28, 2009

என்னை மாற்றிவிடு !

உன்னை ஒரு நொடிக்கு ஒரு முறையேனும் பார்க்க முடியுமென்றால்
என்னை உன் இமையாக மாற்றிவிடு

உன்னை எப்பொழுதும் தொடர முடியுமென்றால்
இக்கணமே உன் நிழலாய் என்னை மாற்றிடு

Tuesday, February 24, 2009

இரவே !

கருப்பு பட்டாடை உடுத்தி
வெள்ளை தேவதையை வரவேற்கும் வானம்
தூரத்து வெள்ளை தேவதைகளையும் எட்டிப்பிடித்து
வானத்தில் செதுக்கும் நள்ளிரவு
இரவே ! உன்னை விட அழகு
இந்த உலகத்தில் இருக்ககூடுமோ ?

Sunday, February 15, 2009

சாதியாம், மதமாம் .இந்த உலகத்தை வெறுத்த நாட்கள் .தந்தையின் குரல் வீடு முழுவதும் எதிரொலித்தது .மனித இனமே இல்லாத இடத்திற்கு சென்று விடலாம் என்று இருந்தது .என் காதலை தந்தையின் உயிருக்காக துறந்தேன் .பெற்றோரின் விருப்பப்படி திருமணம் இல்லை சடங்கு ஒன்று நடந்தது .அதுதான் திருமணமாம் !!.நாட்கள் ஓடின .என் மகள் காதல் செய்வதாக அரசல் புரசலாக மனைவி சொன்னாள்.ஏனோ என்னுள் குழப்பம் .மனதை ஊமையாக்கி மூளை மகளிடம் பேசியது அவனை மறந்து விடு என்று.

நான் ரசித்த

நான் ரசித்த முதல் மொழி ,உன் மௌனம்
நான் ரசித்த முதல் ஒலி ,உன் சிரிப்பலை
நான் ரசித்த முதல் ஓவியம் ,உன் காலடி
நான் ரசித்த முதல் பெண் ,நீ

காதல் இல்லா

கனவுகள் இல்லா விழிகள் இல்லை
பிரிவுகள் இல்லா உறவுகள் இல்லை
கண்ணீர் இல்லா காதல் இல்லை
காதல் இல்லா மனிதனும் இல்லை

என்னை மாற்றிவிட்டாய்

நிலவை நான் வருணித்ததில்லை
தென்றலை நான் ரசித்ததில்லை
மலரை நான் வருடியதில்லை
கனவை நான் விரும்பியதில்லை
கவிதைகளை நான் கிருக்கியதில்லை
இன்று உன் கடைக்கண் பார்வையில்
என்னை மாற்றிவிட்டாய் முழுவதுமாய்

Friday, February 13, 2009

என் காதல்

அட்டைகளில் காதல் சொல்லவில்லை
பூக்களில் காதல் சொல்லவில்லை
என் கண்களால் சொன்னேன்
என் இதயம் முழுவதும் உனக்காக தருகிறேன் என்று
இதுதான் காதல் என்றால்
என் காதலும் புனிதமானது
என் இதயத்தை ஒரு நொடியில் நொறுக்கிவிட்டாய்
என் இதயத்தில் வசிக்கும் உன் நினைவுகளை நொறுக்க
நான் எத்தனை யுகங்கள் காத்திருக்க வேண்டுமோ !!

மாலை

மாலையின் இளங்காற்று இசையமைக்க
இந்திர லோகத்தின் ரதிகள் போல
நடனம் ஆடிய மரங்களை
பார்த்து ரசித்த வாரே கண்ணுரங்கியது கதிரவன்

Thursday, February 12, 2009

நிலவாக உன்னை வருணித்தேன்
எட்டாத தூரத்தில் நீ இருப்பதால்

Wednesday, February 11, 2009

முதுமை

வசந்த கால நினைவுகளை அலசும் காலம்
பழைய உறவுகளை நாடும் காலம்
இளமையை என்றும் எட்டிப்பிடிக்க எண்ணும் காலம்

இளமை

தென்றலை ரசித்த காலம்
நிலவை வருணித்த காலம்
புதுமையை விரும்பிய காலம்
கனவுகளில் நெகிழ்ந்த காலம்

Tuesday, February 10, 2009

ஒரு நொடி வரம்

இறந்த காலம் முழுவதும் உன் நினைவுகள்
நிகழ்காலம் முழுவதும் இறந்தகாலத்தின் சுவடுகள்
என் எதிர்காலமும் நீயாக தெரிவது ஏனோ ?
எனக்காக வாழ ஒரு நொடியை வரமாக தருவாயோ

சொல்லாத காதல்

கனவுகள் மட்டும் சுமந்த நெஞ்சம் அன்று உன்னால் உன் நினைவுகளை மட்டும் சுமக்க ஆசைப் பட்டது. நீ இருக்கும் இடமெல்லாம் தேடினேன் .ஏனோ அன்று உன்னை காண முடியவில்லை .கண்களில் மட்டும் கண்ணீர் அருவியாய் கொட்டியது .ஏனோ அன்று நீ கொடுத்த வலி இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.உன்னிடம் சொல்ல முடியாமல் போனது என் மனதை .இன்று உன்னை பார்த்தேன் .பழைய எண்ணங்கள் மனதில் தடம் புரண்டன .பேச முடியாத மௌனம் இருவரின் உதட்டில் . என் காதலை அன்று உன்னிடம் சொல்ல உன்னை தேடினேன் .நீ என்னை காணாமலே சென்று விட்டாய் என்று கூறினாய் .
யுகங்கள் கடந்து விட்டது .ஆனால் அன்று நீ கொடுத்த வலி இனிக்கிறது முதல் முறையாக .இன்று உணர்கிறேன் சொல்லாத காதலும் புனிதமென்று .

Monday, February 9, 2009

நாளைய உலகம்

நான்கு சுவற்றிர்க்குள் முடிந்து போவது வாழ்க்கை அல்ல
பிறர் வகுத்த நெறிகளில் வாழ்வதும் வாழ்கை அல்ல
கண்கள் எல்லைகள் காட்டும் வரை காண்பதற்கு காட்சிகள் ஏராளம்
நீ காணாத காட்சிகளை காண முற்படு
நீ விரும்பிய செயல்களை செய்
உன் எண்ணங்களை விட இந்த உலகம் பெரிதல்ல
நாளைய உலகத்திலாவது நீ உனக்காக வாழ்

Saturday, February 7, 2009

நட்பு

நான் வாழ நீ வேண்டும்
ஆனால்,நாம் வாழ காதல் தேவை இல்லை
நட்பு மட்டும் போதும்

Friday, February 6, 2009

கடைசி காதல் கடிதம்

என் அன்பு மனைவிக்கு

இயற்கை ஜாளங்களை கண்டு தெளித்த கண்கள்,
மலர்ந்த பூக்களை வருடிய கைகள்,
இசைக்கு அடிமை சாசணம் எழுதிய காதுகள்,
சமையலறை ஆராய்ச்சிக்கு தலை வணங்கிய நாவு,
இவையனைத்தும், என்றோ ஓய்வு எடுக்க ஆரம்பித்து விட்டது
ஐம்புலண்களின் ஏமாற்றத்தில் முதுமையின் கொடுமையை அறியவில்லை நான்
இன்று, உன் பிரிவில் முழுவதும் உணர்கிறேன்
முதுமையில்,தனிமை கொடுமை என்று!!

இறந்த கால நினைவுகள்

முதலாம் வகுப்பு புத்தகங்களை பார்க்கும்போது
நெஞ்சில் தோன்றும் சிரிப்பலைகள்
காட்சிகளை தொகுத்து காட்டும் கண்கள்
முகத்தில் ஓரத்தில் மெலிதான சிரிப்பு
சில விநாடிகளில் ஏக்கப் போர்வையை விரிக்கும் விழிகள்
உயிருள்ள நிகழ்காலத்தில் இன்பத்தை தேடாமல்,
"இறந்த" காலத்தின் நினைவுகளை ஆராய்ந்து இன்பத்தை நாடுகிறது மனம்
இன்று மட்டும் இல்லாமல்
இந்த இனிமையான நினைவுகளை
ஆயிரம் முறை அலசும் இந்த மனம்

Tuesday, February 3, 2009

திருமணம்

நீ விரும்பியதை என்னை விரும்பச் செய்தாய்
நீ வெறுப்தை என்னை வெறுக்கச் செய்தாய்
நீ நினைப்பதை என்னை நினைக்கச் செய்தாய்
திருமணம் என்ன?
என் எண்ணங்களின் கல்லறையா?

கண்ணீர் துளி

உன்னை மறக்க எண்ணுகிறேன்
மனம் முழுக்க உன் நினைவுகளை சுமந்தவாரே
இதோ கிளம்பிவிட்டது
உன் நினைவுகளை அலசியவாரே என் கண்ணீர் துளிகள்

நினைவுகள்

பிரிவின் கொடுமை தெரியவில்லை
உன் நினைவுகள் என்னுடன் இருப்பதால்